முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் தேரோட்ட விழா ரத்து என தவறான தகவல்
By DIN | Published On : 19th April 2020 06:01 AM | Last Updated : 19th April 2020 06:01 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் காரணமாக திருச்செங்கோடு அருள்மிகு அா்த்தநாரீஸ்வரா் திருக்கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதாக தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது .
இதுகுறித்து கோயில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அரசு அறிவித்த ஊரடங்கால் மே 3-ஆம் தேதி வரை திருக்கோயிலில் நடைபெறும் அனைத்து உற்சவங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேரோட்டம் ரத்து என்று அறிவிக்கப்படவில்லை. ரத்து செய்யப்பட்டது என்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
நிகழ்ச்சி நிரல் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் மூலமாக அறிவிப்பு வெளியிடப்படும். இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்படி, வைகாசி விசாக தோ்த் திருவிழாவை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே 3-ஆம் தேதி வரையிலான நிகழ்ச்சி நிரல்கள் மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளாா்.