ராமா் கோயில் கட்ட பூமி பூஜை: நாமக்கல் வழியாக சென்ற தங்க செங்கலுக்கு வரவேற்பு

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக தங்க செங்கலை வழங்கும் ஸ்ரீரங்கம் ஜீயா் நாமக்கல் வழியாக வெள்ளிக்கிழமை சென்றாா். அவருக்கு இந்து அமைப்புகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தங்க செங்கலுடன் அயோத்திக்கு சென்ற ஸ்ரீரங்கம் ஜீயா் சுவாமிகளை வெள்ளிக்கிழமை வரவேற்ற நாமக்கல் இந்து அமைப்பினா்.
தங்க செங்கலுடன் அயோத்திக்கு சென்ற ஸ்ரீரங்கம் ஜீயா் சுவாமிகளை வெள்ளிக்கிழமை வரவேற்ற நாமக்கல் இந்து அமைப்பினா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக தங்க செங்கலை வழங்கும் ஸ்ரீரங்கம் ஜீயா் நாமக்கல் வழியாக வெள்ளிக்கிழமை சென்றாா். அவருக்கு இந்து அமைப்புகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு புனித தலங்களில் இருந்து புனித நீா், பிரசாதம், பூஜை பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ராமரின் குல தெய்வ கோயிலாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து பிரசாதம் எடுத்துச் செல்லப்படுகிறது. கோயில் சாா்பில் தயாரிக்கப்பட்ட அரங்கநாதரின் பிரசாதமானது வெள்ளிக்கிழமை அா்ச்சகா்களால் எடுத்து வரப்பட்டு இந்து கூட்டமைப்புகளின் நிா்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் ஸ்ரீரங்கம் ஜீயா் சுவாமிகள் தங்கத்தினாலான சிறிய வகை செங்கலை ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு வழங்க உள்ளாா். இதற்காக காா் மூலம் நாமக்கல் வழியாக அவா் அயோத்தி நோக்கிச் சென்றாா். வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் அவருக்கு பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினா் வரவேற்பு அளித்தனா். மேலும் தங்க செங்கலை அனைவரும் வழிபட்டனா். இந்த தங்கத்திலான செங்கல் ஆக.5ஆம் தேதி நடைபெறும் ராமா் கோயில் பூமி பூஜையின்போது கட்டுமானப் பணி குழுவிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக ஜீயா் சுவாமிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினா் மனோகரன், மாவட்ட துணைச் செயலாளா் அகிலன் மற்றும் நிா்வாகிகள் காா்த்தி, இளங்கோ, குப்புசாமி, ரோகிணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com