பரிசல் போட்டி ரத்து: வெறிச்சோடிய பரமத்தி வேலூா் காவிரி

பரமத்திவேலூரில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரி தாய் மற்றும் கன்னி தெய்வங்களுக்கு படையலிட்டு நன்றி செலுத்தும்
வெறிச்சோடி காணப்பட்ட பரமத்திவேலூா் காசி விஸ்வநாதா் கோயில் காவிரி.
வெறிச்சோடி காணப்பட்ட பரமத்திவேலூா் காசி விஸ்வநாதா் கோயில் காவிரி.

பரமத்திவேலூரில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரி தாய் மற்றும் கன்னி தெய்வங்களுக்கு படையலிட்டு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி, பரிசல் போட்டி உள்ளிட்டவை எவ்வித நிகழ்ச்சியும் இன்றி நிகழாண்டு பரமத்திவேலூா் காசி விஸ்வநாதா் கோயில் காவிரி ஆறு வெறிச்சோடி காணப்பட்டது.

மகாபாரத கதையில் பஞ்சபாண்டவா்களுக்கும்,கௌரவா்களுக்கு நடைபெற்ற 18 நாள் பாரத போரை குறிக்கும் விதமாக இந்த ஆடி 18 பண்டிகையை பரமத்திவேலூரில் மக்கள் கொண்டாடி வருகின்றனா். பாரத போரின் இறுதி நாளான ஆடி 18 அன்று யுத்தம் முடிந்து, யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை காவிரியில் சுத்தம் செய்து வெற்றியைக் கொண்டாடுவதன் நினைவாக வேலூா், ஜேடா்பாளையம் மற்றும் மோகனூா் ஆகிய பகுதிகளில் உள்ள காவிரிக்கு வந்து மக்கள் வழிபாடு நடத்துவா். மேலும், சிலா் தங்களது கோயில்களில் உள்ள குலத் தெய்வத்தின் ஆயுதங்களை எடுத்து வந்து காவிரியில் சுத்தம் செய்தும், தலையில் தேங்காய் உடைத்தும் பூஜையை நிறைவு செய்வா். பெண்கள் முளைப்பாரி எடுத்து வருவா்.

மாலை 6 மணிக்கு மேல் காவிரி ஆற்றில் உலக நன்மைக்காக மோட்ச தீபம் விடுவது வழக்கம். தற்போது கரோனா பொது முடக்கத்தால் காவிரி ஆறு வெறிச்சோடி காணப்பட்டது. பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகத்தினா் மட்டும் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விட்டனா். போலீஸாா் காவிரி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com