நாமக்கல்: கருணாநிதி 2-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
By DIN | Published On : 07th August 2020 12:57 PM | Last Updated : 07th August 2020 12:57 PM | அ+அ அ- |

அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அதனையொட்டி நாமக்கல் - மோகனூர் சாலையில் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், மாநில மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் ராணி, நகர பொறுப்பாளர் ராணா ஆர். ஆனந்த் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.