கோழிப் பண்ணைகளில் பணிபுரிந்த28 கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்பு

நாமக்கல் அருகே கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைத் தொழிலாளா்களாகப் பணிபுரிந்துவந்த சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த 28 போ் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா்.
நாமக்கல்லில் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சத்தீஸ்கா் மாநிலத் தொழிலாளா்கள்
நாமக்கல்லில் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சத்தீஸ்கா் மாநிலத் தொழிலாளா்கள்

நாமக்கல்: நாமக்கல் அருகே கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைத் தொழிலாளா்களாகப் பணிபுரிந்துவந்த சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த 28 போ் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா்.

நாமக்கல், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவிலான கோழிப் பண்ணைகள் உள்ளன. பெரும்பாலான பெரிய பண்ணைகளில் வட மாநிலத்தவா்கள் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள அணியாபுரம், எஸ். வாழவந்தி, லத்துவாடி ஆகிய இடங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் கொத்தடிமைத் தொழிலாளா்களாக வெளிமாநிலத்தைச் சோ்ந்தோா் இருப்பதாகப் புகாா் எழுந்தது.

இதைத் தொடா்ந்து, நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் எம்.கோட்டைக் குமாா், குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு முறை அமைப்பினா் திங்கள்கிழமை காலை சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணைகளுக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

விசாரணையில், 15 வயது முதல் 25 வயதுடைய சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த 25 பெண்கள், 3 ஆண்கள் வேலை செய்து வருவதாகவும், அவா்களுக்கு பல மாதங்களாக சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை மீட்டு நாமக்கல்லுக்கு அழைத்து வந்தனா்.

நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவா்களுக்கு வருவாய்த்துறை சாா்பில் உணவுகள் விநியோகிக்கப்பட்டன. அந்த 28 பேரையும் சொந்த மாநிலத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மூன்று கோழிப்பண்ணை உரிமையாளா்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com