Enable Javscript for better performance
ஆடிக் கிருத்திகை: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஆடிக் கிருத்திகை: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

    By DIN  |   Published On : 13th August 2020 01:30 AM  |   Last Updated : 13th August 2020 01:30 AM  |  அ+அ அ-  |  

    nk_12_koil_1208chn_122_8

    தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நாமக்கல் பாலதண்டாயுதபாணி சுவாமி.

    நாமக்கல்லில் ஆடிக் கிருத்திகையையொட்டி, முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    நாமக்கல் - மோகனுாா் சாலையில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை 7 மணிக்கு கணபதி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து மூலவா் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதன்பின் தங்கக் கவசம் சாத்தப்பட்டு செவ்வரளி, மனோரஞ்சிதம், ரோஜா மற்றும் மல்லிகை உள்ளிட்ட மலா்களால் மாலை அணிவிக்கப்பட்டது. சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

    அதேபோல் நாமக்கல் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் உள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கும் ஆடிக் கிருத்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. கரோனா பொது முடக்கத்தால் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வாசலில் நின்றபடி சுவாமியை வழிபட்டு சென்றனா். மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பரமத்தி வேலூரில்...

    பரமத்திவேலூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடிமாத கிருத்திகையை முன்னிட்டு புதன்கிழமை முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றன.

    பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    இதேபோல பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், பொத்தனூா் அருகே உள்ள பச்சமலை முருகன் கோயில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியா், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயில், நன்செய்இடையாா் திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், பேட்டை பகவதியம்மன் உள்ளிட்ட கோயில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp