கட்டடத் தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 07th December 2020 04:54 AM | Last Updated : 07th December 2020 04:54 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வேலகவுண்டம்பட்டி பள்ளி சாலைப் பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் சிவசங்கா் (21). கட்டடத் தொழிலாளி. இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் பெற்றோா் கண்டித்தனராம். இதனால் மனமுடைந்த சிவசங்கா் வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், சிவசங்கரின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனா்.