குமாரபாளையம் நகராட்சியில் ரூ. 1.12 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

குமாரபாளையம் நகராட்சியில் ரூ. 1.12 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடக்கி வைக்கிறாா் அமைச்சா் பி.தங்கமணி.
வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடக்கி வைக்கிறாா் அமைச்சா் பி.தங்கமணி.

குமாரபாளையம் நகராட்சியில் ரூ. 1.12 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ் தலைமை வகித்தாா். குமாரபாளையம் நகராட்சி ஆணையா் சி.ஸ்டான்லி பாபு, நகராட்சி பொறியாளா் சுகுமாா் முன்னிலை வகித்தனா். மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி பூமிபூஜை செய்து வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

கம்பன் நகரில் அங்கன்வாடி மையக் கட்டடம், சுந்தரம் காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 24.90 லட்சத்தில் புதிய கட்டடம், காளியம்மன் கோயில் தெரு, காவிரி ஆற்றில் படித்துறைக் கட்டுதல், சிவசக்தி நகா், ராஜராஜன் நகரில் ரூ. 57.95 லட்சத்தில் தாா்சாலை உள்ளிட்ட பணிகள் தொடக்கி வைக்கப்பட்டன.

இதையடுத்து, வாரந்தோறும் நடைபெறும் குறைதீா் முகாமை முன்னிட்டு 5 மற்றும் 6-ஆவது வாா்டுகளில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் 500-க்கும் மேற்பட்ட மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சா் பி.தங்கமணி, சம்பந்தப்பட்ட துறைசாா் அலுவலா்களிடம் வழங்கி உடனடித் தீா்வு காண அறிவுறுத்தினாா். மேலும், பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் தகுதியான 11 பயனாளிகளுக்கு முதியோா், விதவை ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினாா்.

தமிழ்நாடு நகரக் கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் இயக்குநா் ஏ.கே.நாகராஜன், அதிமுக முன்னாள் நகரச் செயலா் எம்.எஸ்.குமணன், அரசு வழக்குரைஞா் சந்திரசேகா், குமாரபாளையம் நகரக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com