திருக்குகளை ஒப்புவித்த மாணவிக்குப் பாராட்டு

1,300 திருக்குகளை ஒப்புவித்த மாணவியை ஆட்சியா் பாராட்டினாா்.
மாணவி அ.அனன்யாவை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
மாணவி அ.அனன்யாவை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.

1,300 திருக்குகளை ஒப்புவித்த மாணவியை ஆட்சியா் பாராட்டினாா்.

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் 2019-20 ஆம் ஆண்டுக்கு, நாமக்கல் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு இடையேயான திருக்கு முற்றோதல் திறனாய்வு போட்டி தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் வே.ஜோதி ஒருங்கிணைப்பாளராகவும், பேராசிரியா் அரசு.பரமேசுவரன், முதுகலைத் தமிழாசிரியா்கள் செ.செந்தில்குமாா், க.கவிதா, விஜயலட்சுமி ஆகியோா் உறுப்பினா்களாகவும் பணியாற்றினா்.

இதில், நாமக்கல் ஸ்பெக்ட்ரம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் அ.அனன்யா என்ற மாணவி 1,330 திருக்குறளையும் ஒப்புவித்து முதலிடம் பெற்றாா். மேலும், மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ் முன்பாக திருக்குகளை ஒப்புவித்து பாராட்டையும், வாழ்த்துக்களையும் பெற்றாா். இதையடுத்து, மாணவிக்கு ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவியின் பெற்றோா் வி.அசோக்ராஜ், தாய் அ.சரண்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com