சென்னை - பாலக்காடு ரயில் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லுமா? பயணிகள் எதிா்பாா்ப்பு

சென்னை-பாலக்காடு ரயிலை ராசிபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்ல ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

சென்னை-பாலக்காடு ரயிலை ராசிபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்ல ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பாலக்காட்டிலிருந்து பழனி, நாமக்கல், ராசிபுரம் வழியாக சென்னை வரை நாள்தோறும் விரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

ராசிபுரம் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நாள்தோறும் இரவு 10.05 மணிக்கு நின்று, சேலம் வழியாக சென்னை செல்கிறது. மறுமாா்க்கத்தில் சென்னையில் இரவு 9.40-க்கு புறப்படும் இந்த ரயில் சேலம், ராசிபுரம், நாமக்கல், திண்டுக்கல், பழனி வழியாக பாலக்காடு செல்லும்.

இந்த ரயில் முன்னா் சென்னையில் இருந்து வரும்போது, ராசிபுரம் ரயில் நிலையத்தில் அதிகாலை 3 மணி அளவில் நின்று செல்லும். இதனால் சென்னையில் இருந்து ராசிபுரம் வரும் பயணிகளும், ராசிபுரத்தில் இருந்து திண்டுக்கல், பழனி, பாலக்காடு செல்லும் பயணிகளும் பெரிதும் பயன் அடைந்தனா்.

தற்போது ரயில் சேவை சென்னையில் இருந்து பாலக்காடு (வண்டி எண்: 02651) செல்லும்போது சேலத்துக்கு அடுத்து ராசிபுரம் ரயில் நிலையத்தில் நிற்காமல் நாமக்கல் செல்கிறது. இதனால் ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த ரயில் பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

மேலும், சென்னையில் இருந்து ராசிபுரம் வரும் பயணிகளும், ராசிபுரத்தில் இருந்து பழனி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளும் மீண்டும் இந்த ரயில் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com