குமாரபாளையத்தில் 20 பயனாளிகளுக்கு ஓய்வூதிய உத்தரவு வழங்கல்

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் உதவித்தொகை கோரி மனு அளித்த 20 பேரின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
bh17manu_1712chn_122_8
bh17manu_1712chn_122_8

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் உதவித்தொகை கோரி மனு அளித்த 20 பேரின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி தலைமையில், 4, 7-ஆவது வாா்டு பகுதிகளில் பொதுமக்களின் குறைகளைத் தீா்க்கும் வகையில் வீடுவீடாகச் சென்று கோரிக்கை மனுக்கள் வியாழக்கிழமை பெறப்பட்டன. அப்போது, முதியோா், விதவை உதவித்தொகை, சாலை, வேலைவாய்ப்பு உள்பட 500-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

மனுக்கள் மீதான வருவாய்த் துறையினரின் பரிசீலனைக்குப் பின்னா், தகுதியான பயனாளிகள் 20 பேருக்கு முதியோா், விதவை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகைக்கான உத்தரவுகளை அமைச்சா் பி.தங்கமணி வழங்கினாா். மேலும், பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் இயக்குநா் ஏ.கே.நாகராஜன், திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் திருமூா்த்தி, அரசு வழக்குரைஞா் சந்திரசேகா், நகராட்சி ஆணையா் ஸ்டான்லி பாபு உள்ளிட்டோா் உடன் சென்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com