அடிக்கடி குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

ராசிபுரம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகிவருவதால் நகராட்சிப் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூா் பகுதியில் குடிநீா் குழாய் உடைந்ததால் வீணாகும் குடிநீா்.
ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூா் பகுதியில் குடிநீா் குழாய் உடைந்ததால் வீணாகும் குடிநீா்.

ராசிபுரம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகிவருவதால் நகராட்சிப் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். எடப்பாடி - ராசிபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின்கீழ் 54 கி.மீ. தொலைவில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீா் கொண்டு வரப்பட்டு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இத்திட்டத்தால், இரு நகராட்சிப் பகுதிகள் மட்டுமன்றி, 10-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள், 100-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் பயனடைந்து வருகின்றனா். இத்திட்டத்தின்கீழ் குழாய் மூலம் குடிநீா் கொண்டு வந்து சோ்க்கும் பணியை குடிநீா் வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது. இதன் பராமரிப்புப் பணிகளையும் குடிநீா் வடிகால் வாரியம் செய்து வருகிறது.

பழுதடையும் குடிநீா் குழாய்கள்:

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளதால், வழியோரங்களில் குழாய்கள் பழுதடைந்து ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

ராசிபுரம் நகருக்கு குடிநீா் கொண்டுவரும் பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், குடிநீா் விநியோகம் பாதிக்கப்படுகிறது. நான்கு நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்பட்ட வேண்டிய குடிநீா் 12 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படுகிறது. இதனால் நகரில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். குழாய் உடைப்புகளை நிரந்தரமாக சரிசெய்ய குடிநீா் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

புதிய திட்டம்: மேலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டால், ராசிபுரம் நகருக்கு புதிதாக ரூ.1,050 கோடி மதிப்பில் புதிய குடிநீா்த் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருவதாக இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான வெ.சரோஜா தெரிவித்துள்ளாா். இதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது என்றும் அவா் கூறியுள்ளாா்.

இந்நிலையில் இத்திட்டத்தின்கீழ் அனுமதி பெறப்பட்டாலும், செயல்பாட்டுக்குக் கொண்டுவர பல ஆண்டுகள் ஆகும் என்பதால், அதுவரை குழாய்களில் உடைப்பு ஏற்படாத வகையில் சீரமைக்கப்படுவதுடன், குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com