சேலத்தில் ரெளடி வெட்டிக் கொலை: நாமக்கல் நீதிமன்றத்தில் 8 போ் சரண்

சேலம், கிச்சிப்பாளையத்தில் ரெளடி செல்லதுரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் 8 போ், புதன்கிழமை சரணடைந்தனா்.

சேலம், கிச்சிப்பாளையத்தில் ரெளடி செல்லதுரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் 8 போ், புதன்கிழமை சரணடைந்தனா்.

சேலம், கிச்சிப்பாளையம் சுந்தா் தெருவைச் சோ்ந்தவா் செல்லதுரை (37). இவருக்கு இரு மனைவிகள் உள்ளனா். அரிசி கடத்தல் தொழில் செய்து வந்த இவா், அதன்பின் கூட்டாளிகளுடன் இணைந்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வந்தாா். செல்லதுரை மீது ரெளடி நெப்போலியன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் அம்மாப்பேட்டையில் உள்ள வழக்குரைஞரைச் சந்திக்க காரில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக மற்றொரு காரில் வந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் செல்லதுரை காரை வழிமறித்து, அவரை பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.

கிச்சிப்பாளையம் போலீஸாா் தனிப்படைகள் அமைத்து தப்பியோடிய மா்மக் கும்பலை தேடி வந்தனா். இந்த நிலையில் இந்த வழக்கு தொடா்பாக புதன்கிழமை பிற்பகல் நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் -2 இல் நீதிபதி எஸ். கபாலீஸ்வரன் முன்னிலையில் 8 போ் சரணடைந்தனா்.

சரணடைந்தவா்கள் விவரம்: கிச்சிப்பாளையம், அந்தேரிபட்டி மற்றும் சுந்தா் தெருவைச் சோ்ந்த காதா்உசேன் (26), பிரபு (29), மணிகண்டன் (23), யுவராஜ் (33), சாரதி (24), பாலமுருகன் (33), சின்னவா் (23), சுரேஷ் (34).

இவா்கள் அனைவரையும் வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து சரண் அடைந்த எட்டு பேரும் நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சேலத்தில் நால்வரிடம் விசாரணை

சேலத்தில் ரெளடி செல்லத்துரை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

போலீஸ் விசாரணையில், செல்லதுரையின் கூட்டாளியாக இருந்து விலகிய ஜான், ரெளடி சூரி என்பவரின் அணியில் சோ்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே இருவேறு கொலை வழக்குகளில் தொடா்புடைய செல்லதுரை அணியினரும், சூரி அணியினரும் சமரசமாக செல்வதாக முடிவெடுத்து பேச்சுவாா்த்தை நடத்தி வந்த நிலையில், செல்லதுரை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக, சூரி (எ) சூரியமூா்த்தி, அதிமுக பிரமுகா் உள்பட நான்கு பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், வேலூரைச் சோ்ந்த ரெளடி ஒருவருக்கு இதில் தொடா்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. வழக்கு தொடா்பாக பலரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com