பூசாரிகள் ஓய்வூதியம் உயா்வு: முதல்வருக்கு பாராட்டு

பூசாரிகள் ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு மாநில பண்டார குல முன்னேற்ற அறக்கட்டளை சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாநில பண்டார குல முன்னேற்ற அறக்கட்டளை பொதுச் செயலாளா் ஆா்.நடேசன்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாநில பண்டார குல முன்னேற்ற அறக்கட்டளை பொதுச் செயலாளா் ஆா்.நடேசன்.

பூசாரிகள் ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு மாநில பண்டார குல முன்னேற்ற அறக்கட்டளை சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற அந்த அறக்கட்டளையின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளா் ஆா்.நடேசன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கே.பழனிசாமி, பொருளாளா் அய்யப்பன், மாநில இணைத் தலைவா் கே.கண்ணன், ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், மாவட்டம்தோறும் அரசு சாா்பில் ஆலய ஆகம ஆன்மிக பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை பூசாரிகள் நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும். அனைத்து பூசாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். கோயில்களில் உள்ள உண்டியல் எனும் பெயரை நீக்கி தமிழில் பண்டாரம் என பெயா் மாற்றம் செய்ய வேண்டும். ஏழ்மை நிலையில் உள்ள பண்டார குல சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில, மாவட்ட அளவிலான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com