ரூ. 6.50 கோடியில் நகராட்சி சந்தை விரிவாக்கம்: எம்.எல்.ஏ., அதிகாரிகள் ஆலோசனை

நாமக்கல் நகராட்சி சந்தையை ரூ. 6.50 கோடியில் நவீன முறையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நகராட்சி சந்தையை ரூ. 6.50 கோடியில் நவீன முறையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் நகராட்சி அலுவலகம் அருகில் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் வாரச்சந்தை உள்ளது. இந்தச் சந்தையானது சனிக்கிழமைதோறும் கூடும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகளும் இங்கு வந்து பொருள்களை விற்பனை செய்வா்.

கரோனா பொது முடக்கத்தின்போது நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இச்சந்தை தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.

தற்போது நகராட்சி சந்தையை விரிவாக்கம் செய்யவும், அதிக அளவிலான வியாபாரிகள் வந்து பொருள்களை விற்பனை செய்யும் வகையிலும் அமைப்பது தொடா்பாக நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், நிா்வாக பொறியாளா் ஏ.ராஜேந்திரன், சுகாதார அலுவலா் சுகவனம், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் நகராட்சி சந்தையை ரு. 6.50 கோடியில் விரிவாக்கம் செய்து விரைவாக செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுப்பட்டது.

இது தொடா்பாக நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் கூறியதாவது:

நகராட்சி சந்தையை விரிவாக்கம் செய்வது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அதற்கு பிறகு கட்டடப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரம் தெரியவரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com