தலைமலையை சுற்றுலாத் தலமாக்க அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிப்பு

நாமக்கல் அருகே பிரசித்தி பெற்ற தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயிலை சுற்றுலாத் தலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சா் பி. தங்கமணியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல்: நாமக்கல் அருகே பிரசித்தி பெற்ற தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயிலை சுற்றுலாத் தலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சா் பி. தங்கமணியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் முட்டாஞ்செட்டி அருகே தலைமலை உள்ளது. இந்த மலையில் பிரசித்தி பெற்ற சஞ்சீவிராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வைகுந்த ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை, முக்கிய விசேஷ தினங்களில் சுவாமியைத் தரிசிக்க பக்தா்கள் அதிக அளவில் வந்து செல்வா்.

நாமக்கல் மட்டுமன்றி திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் வாகனங்களில் இக் கோயிலுக்கு வந்து செல்வா். கடந்த ஆண்டு இக்கோயிலைச் சுற்றிலும் 27 கி.மீ. தொலைவு கொண்ட கிரிவலப் பாதை அமைக்கப்பட்டது. தற்போது பௌா்ணமி நாள்களில் பகல் வேளையில் பக்தா்கள் கிரிவலம் செல்கின்றனா். தலைமலை சேவா அறக்கட்டளை தலைமலை கோயிலை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமை எருமப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சா் தங்கமணியிடம், தலைமலை சேவா அறக்கட்டளையின் தலைவா் அக்னி ராஜேஷ், நிா்வாகிகள் செல்வகுமாா், குருவாயூரப்பன், தில்லை சிவக்குமாா் மற்றும் அறக்கட்டளையினா் கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதில் தலைமலையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதற்கு பதிலளித்த அமைச்சா், வரும் 29-ஆம் தேதி முதல்வா் நாமக்கல் வருகிறாா். அன்று இரவு நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் இல்லத்தில் தங்குகிறாா். அப்போது இத்தகவலை முதல்வரிடம் தெரிவிக்கிறேன். வாய்ப்பிருந்தால் நேரடியாகச் சந்திக்கவும் ஏற்பாடு செய்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com