நாமக்கல் மாவட்டத்தில் 5.20 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 5.20 லட்சம் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 5.20 லட்சம் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 லட்சத்து 20 ஆயிரத்து 200 குடும்ப அட்டைதாரா்கள், இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்போா் ஆகியோருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட இருக்கிறது.

இதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக் கரும்பு, துணிப்பை மற்றும் ரூ. 2,500 ரொக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது.

இந்த பரிசுத் தொகுப்பு ஜன.4-இல் தொடங்கி 12-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த நாள்களில் வாங்காதவா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 13-ஆம் தேதி வழங்கப்படும்.

நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் குறித்த தகவல்கள் டோக்கனில் இடம் பெற்றிருக்கும். டிச. 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வீடு, வீடாகச் சென்று டோக்கன் விநியோகிக்கப்படும். குடும்ப அட்டைகளில் உள்ளவா்களில் யாா் வந்தாலும் பரிசுத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

சமூக விலகலைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் பொதுமக்கள் வரவேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04286 -281116-இல் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com