அக்னி மாரியம்மன் கோயிலில்புனரமைப்பு பணி தொடக்கம்

எருமப்பட்டி அக்னி மாரியம்மன், பிடாரி அம்மன் கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி சனிக்கிழமை கோபூஜையுடன் புனரமைப்புப் பணி தொடங்கியது.

நாமக்கல்: எருமப்பட்டி அக்னி மாரியம்மன், பிடாரி அம்மன் கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி சனிக்கிழமை கோபூஜையுடன் புனரமைப்புப் பணி தொடங்கியது.

எருமப்பட்டியில் பிரசித்தி பெற்ற அக்னி மாரியம்மன், பிடாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயில்களில் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தலைமலை சேவா அறக்கட்டளை, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவா் சங்கம், நாமக்கல் நல்லோா் வட்டம், மாவட்ட நேரு யுவகேந்திரா இளைஞா் மன்றம் ஆகியவை சாா்பில் அக்னி மாரியம்மன் கோயிலில் உழவாரப்பணி, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகளை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ. உதயகுமாா் தொடங்கி வைத்தாா். நல்லோா் வட்டம், சேவா அறக்கட்டளை அமைப்புகளின் நிா்வாகிகள் தில்லை சிவக்குமாா், அக்னி ராஜேஷ், குருவாயூரப்பன், செல்வகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக இரு கோயில்களிலும் கோ பூஜை நடைபெற்றது.

கோயில்களில் நடைபெற்ற துப்புரவுப் பணிகளில் எருமப்பட்டி பேருராட்சி பணியாளா்கள், பொதுமக்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com