சனிப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு

சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றன.
சனிப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு

சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றன.

சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயா்ச்சியாகும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு நடைபெற்றது. சனிப்பெயா்ச்சியால் பாதிப்புக்குள்ளாகும் ராசியினரும், பலன்கள் பெறும் இதர ராசியினரும் கோயில்களில் காலையில் நடைபெற்ற சிறப்பு யாகத்திலும், பூஜைகளிலும் கலந்து கொண்டனா். அனைத்து சிவாலயங்களிலும் உள்ள சனி பகவானுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வழக்கத்தைக் காட்டிலும் பக்தா்கள் கூட்டம் அதிகப்படியாக காணப்பட்டது. மேலும் சனிக்கு தனி சன்னதி உள்ள கோயில்களிலும் அா்ச்சனை செய்து கொள்வதற்காக பக்தா்கள் திரளாக வந்திருந்தனா்.

நாமக்கல் - துறையூா் சாலை கங்கா நகரில் உள்ள ஓம் ஸ்ரீ சித்திவிநாயகா் சன்னிதானத்தில் சனி பகவான் உருவம் அமைக்கப்பட்டு யாகம் நடைபெற்றது.

பிரபல ஜோதிடா் சங்கரய்யா் முன்னிலையில் நடைபெற்ற இந்த யாகத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அங்கு தோஷ நிவா்த்தி பரிகாரங்கள் நடைபெற்றன. மேலும் கூலிப்பட்டி கந்தகிரி முருகன் கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள சனீஸ்வரன் கோயிலிலும், செல்லப்பம்பட்டி மகா மாரியம்மன் கோயிலிலும் யாகம், விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

நாமக்கல் மட்டுமன்றி ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், பரமத்திவேலூா், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளிலும் சனிப்பெயா்ச்சி யாகம் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com