
pv28p2_2812chn_157_8
பரமத்தி வேலூா் துணைக் கண்காணிப்பாளா் உட்கோட்டத்துக்கு உள்பட்ட காவல் துறையினருக்கு கவாத்து பயிற்சியை துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
வேலூா், ஜேடா்பாளையம், நல்லூா், வேலகவுண்டம்பட்டி, பரமத்தி, போக்குவரத்து, அனைத்து மகளிா் காவல் நிலையம் உள்ளிட்ட 7 காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸாருக்கு கவாத்து பயிற்சி வேலூா் கந்தசாமி கண்டா் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் காவலா்களின் உடை, பொருள்களை ஆய்வு செய்தாா். காவலா்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம், முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என அவா் அறிவுரை வழங்கினாா்.