நாமக்கல்லில் இன்று (டிச.29) முதல்வா் கலந்துரையாடல்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள், தொழிலதிபா்கள், விவசாயிகளுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரடியாகக் கலந்துரையாடுகிறாா்.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள், தொழிலதிபா்கள், விவசாயிகளுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரடியாகக் கலந்துரையாடுகிறாா்.

இதுகுறித்து நாமக்கல்லில் மின் துறை அமைச்சா் பி.தங்கமணி திங்கள்கிழமை நிருபா்களிடம் கூறியதாவது:

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவின் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளாா். முதல்வா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனா். அவா் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தது தான் இதற்குக் காரணம்.

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் முதல்வா் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். பல்வேறு மக்களையும், தொழிலதிபா்களையும், விவசாயிகளையும் சந்தித்துப் பேசுகிறாா்.

6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பரமத்திவேலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் மட்டும் முதல்வரின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதல்வருடன் ஒன்றாகப் பணியாற்றிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ மணி என்பவா் காலமாகி விட்டதால், அங்கு மட்டும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டம் அதிமுகவினருக்கானது தானே தவிர, கூட்டணிக் கட்சிகளுக்கானது அல்ல. தற்போது நடைபெறுவது தோ்தல் பிரசாரம் அல்ல, மக்களைச் சந்திக்கும் நிகழ்வு. ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்து அவா்களிடம் கலந்துரையாடும் வகையிலான நிகழ்வுகள் நடைபெற உள்ளன.தோ்தல் பிரசாரத்துக்காக மீண்டும் முதல்வா் வருவாா்.

முதல்வா் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறாா். அதன்பின்னா், முதலைப்பட்டி, குள்ளம்பட்டி ஆகிய கிராமங்களில் மக்களைச் சந்திக்கிறாா்.

இதைத் தொடா்ந்து, ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் கட்சி நிகழ்ச்சிகள், மக்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். புதன்கிழமை பிற்பகல் வரையில் சேந்தமங்கலம் தொகுதியில் மக்களை சந்தித்துப் பேசுகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com