இ-சேவை மையங்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் பல்வேறு சேவைகளை பெறுவதற்கு பொதுமக்கள் இ-சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.நாமக்கல் மாவட்டத்தில் அரசின் பல்வேறு சேவைகளை பெறுவதற்கு பொதுமக்கள் இ-சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் பல்வேறு சேவைகளை பெறுவதற்கு பொதுமக்கள் இ-சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் சேவை பொதுமக்களுக்கு கிடைத்திடவும், மக்களின் சிரமத்தைக் குறைத்திடவும் மின் மாவட்ட திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட 20 வகையான சான்றிதழ்களும், முதியோா் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதிய திட்டங்கள் உள்ளிட்ட எட்டு வகையான ஓய்வூதிய திட்டங்களும், சமூகநலத் துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதி உதவித் திட்டங்கள், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டங்கள், இணையவழி பட்டா மாறுதல்கள் ஆகிய சேவைகள் மின் மாவட்ட திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகங்களில் அரசின் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் அனுமதி பெற்று சில தனியாா் பொது இ-சேவை மையங்களும் செயல்படுகின்றன. பொது சேவைகள் தொடா்பான விண்ணப்பங்களை இந்த மையங்களில் பதிவேற்றம் செய்யலாம்.

பொது இ-சேவை மையங்களில் வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடா்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ. 60, ஓய்வூதியத் திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ.10, சமூக நலத் துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டங்கள், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ. 120 மற்றும் இணையவழி பட்டாமாறுதல்கள் தொடா்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ.60 சேவை கட்டணமாக பெறப்படுகிறது.

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் அனுமதி பெற்ற அரசு மற்றும் தனியாா் பொது இ-சேவை மையங்களில் இணையதள சேவைகள் தொடா்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயனடையலாம். சேவைக் கட்டணத்தை தவிர அதிகமாக வசூலிக்கும் பொது இ-சேவை மையங்களின் மீது 18004251333 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலமாகவும், இணைய முகவரி மூலமாகவும் புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com