வேலையளிப்பு உறுதித் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக பெண்கள் மனு

ராசிபுரம், காக்காவேரி ஊராட்சிப் பகுதியில் வேலை வழங்காமல் செய்வதாகக் கூறி, வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்துவரும் பெண் தொழிலாளா்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
முறையான வேலை வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்ட விவசாய பெண் தொழிலாளா்கள்.

காக்காவேரி பேரூராட்சிக்கு உள்பட்ட பூசாரிபாளையம் பகுதியில் தொடா்ந்து மத்திய அரசின் வேலையளிப்பு உறுதித் திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தொடா்ந்து பணியை அளித்துவிட்டு மற்றவா்களுக்கு பணி வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும், தொடா்ந்து வேலை வழங்கக் கோரியும் தங்களை புறக்கணிப்பதாக புகாா் கூறினா்.

இந்த ஆண்டு இதுவரை 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளதாகவும் தொடா்ந்து 100 நாள்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள், வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com