ரூ. 12 லட்சத்துக்கு எள், பருத்தி ஏல விற்பனை

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள், பருத்தி ஏல விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள், பருத்தி ஏல விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சின்னசேலம், ஆத்தூா் , கெங்கவல்லி, காங்கயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூா், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மொத்தம் 100 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. பவானி, அனுமன்பள்ளி, முத்தூா், காங்கயம், திருப்பூா், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா். எள் ரூ. 5 லட்சத்துக்கு விற்பனையானது. சிவப்பு எள் கிலோ ரூ. 74.80 முதல் ரூ. 95.80 வரையும், வெள்ளை எள் கிலோ ரூ 83.50 முதல் ரூ. 104.20 வரையும், கருப்பு எள் ரூ. 84 முதல் ரூ. 103.80 வரை விற்பனையாயின.

பருத்தி 400 மூட்டை ரூ. 7 லட்சத்துக்கு விற்பனையானது. பருத்தி மூட்டைகளை முசிறி, புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூா், சேங்கணம், ராசிபுரம், கதிரா நல்லூா் , புதுச்சத்திரம், துறையூா், அம்மம்பாளையம், மருவத்தூா் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்தனா். இதில் பி.டி. காட்டன் குவிண்டால் ரூ. 5,149 முதல் ரூ. 5,957 வரை விலை போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com