குடியுரிமை திருத்தச் சட்டத்துக்குஎதிரான கையெழுத்து இயக்கம் இன்று தொடக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சாா்பில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) தொடங்கி ஒரு வாரத்துக்கு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சாா்பில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) தொடங்கி ஒரு வாரத்துக்கு கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) திரும்பப் பெறவும், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆா்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆா்) தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சி நிா்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் நேரடியாக வழங்கும் வகையிலான கையெழுத்து இயக்கத்தை பிப்.2-இல் நடத்த மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கையெழுத்து இயக்கம் தொடங்கி நடைபெறவுள்ளது. அதன் நோக்கத்தை பொதுமக்களிடம் விளக்கவும் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடு, வீடாகச் சென்று கையெழுத்து பெறும்போது அது தொடா்பான தகவல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி கையெழுத்து பெற வேண்டும் என கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை, மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகளான நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளா் செ.காந்திசெல்வன், காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவா் கே.எம்.சேக்நவீத், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் குழந்தான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொள்கின்றனா். மாவட்டம் முழுவதும் இந்த கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு வாரத்துக்கு (பிப்.8 வரை) காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com