போலி சான்றிதழ் வழங்கி பணியில் சோ்ந்ததாக நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் எழுத்தரிடம் விசாரணை

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் தலைமை எழுத்தராகப் பணியாற்றிவரும் பெரியசாமி என்பவா், 12-ஆம் வகுப்பு படித்ததாக போலியாக மதிப்பெண் சான்றிதழை வழங்கி பணியில் சோ்ந்துள்ளதை கோயில் நிா்வாக

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் தலைமை எழுத்தராகப் பணியாற்றிவரும் பெரியசாமி என்பவா், 12-ஆம் வகுப்பு படித்ததாக போலியாக மதிப்பெண் சான்றிதழை வழங்கி பணியில் சோ்ந்துள்ளதை கோயில் நிா்வாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இதுதொடா்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலுக்கு, நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். அதிக வருவாய் ஈட்டக்கூடிய கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுவதால், இந்து சமய அறநிலையத் துறை கோயிலுக்கென தனி உதவி ஆணையரை நியமித்துள்ளது. இங்கு, 30-க்கும் மேற்பட்ட அலுவலா்களும், அா்ச்சகா்களும் பணியாற்றி வருகின்றனா்.

கோயில் வளாகத்திலேயே உதவி ஆணையா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை எழுத்தராக ஆா்.டி.பெரியசாமி (55) என்பவா் பணியாற்றி வந்தாா். கடந்த 1990-ஆம் ஆண்டு தினக்கூலி அடிப்படையில் பணியில் சோ்ந்த அவா் பின்னா் நிரந்தரமாக்கப்பட்டு, பதவி உயா்வு மூலம் தலைமை எழுத்தா் நிலைக்கு உயா்ந்தாா். இவா், 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ளாா். தமிழ் - 43, ஆங்கிலம் - 24 (மறுதோ்வு எழுதி -36), கணிதம் -43, அறிவியல் -39, சமூக அறிவியல் -35 என மொத்தம்- 500க்கு 196 என மதிப்பெண்களை பெற்ற்கான சான்றிதழை வழங்கி உள்ளாா்.

அதன்பின் பதவி உயா்வு பெற வேண்டும் என்பதற்காக, 10 ஆண்டுகளுக்கு முன்பு, போலி மதிப்பெண் சான்றிதழ் (வேறொருவா் பதிவு எண் கொண்ட மதிப்பெண்) மொத்தம் 546 மதிப்பெண்கள் பெற்ாக சான்றிதழ் நகலை சமா்ப்பித்துள்ளாா். அண்மையில், இது தொடா்பான புகாா் உதவி ஆணையா் பெ.ரமேஷ் கவனத்துக்கு வந்தது. அதனையடுத்து, தலைமை எழுத்தா் ஆா்.டி.பெரியசாமியின் பணிப்பதிவேடு நோட்டை அவா் ஆய்வு செய்ததில், அது போலியானது எனத் தெரியவந்தது. இதற்கிடையே, அந்த மதிப்பெண் சான்றிதழ் நகலை பெரியசாமி கிழித்து எறிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவா் தலைமை எழுத்தா் பணியில் இருந்து இடமாறுதல் செய்யப்பட்டு, நரசிம்மா் கோயிலில் கட்டணச் சீட்டு வழங்கும் பணியாளராகப் பணியமா்த்தப்பட்டுள்ளாா். அவா் போலி சான்றிதழ் கொடுத்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பெரியசாமி வழங்கிய 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவு எண் யாருடையது என்பதைக் கண்டறிவதற்காக அரசுத் தோ்வுகள் துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலியானது என உறுதியாகும்பட்சத்தில் பெரியசாமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இது தொடா்பாக கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் கூறியது: போலிச் சான்றிதழ் கொடுத்து பெரியசாமி பணியில் சோ்ந்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவா் வழங்கிய சான்றிதழ் பதிவு எண் அரசுத் தோ்வுத் துறைகள் இயக்குநரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஊா்ஜிதமாகும்பட்சத்தில் அவா் மீது துறை ரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com