Enable Javscript for better performance
முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்வு- Dinamani

சுடச்சுட

    

    முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்வு

    By DIN  |   Published on : 10th February 2020 02:01 AM  |   அ+அ அ-   |    |  

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ.3.45-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல் மண்டல அளவிலான தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் பி.செல்வராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மற்ற மண்டலங்களில் முட்டை விலை சற்று அதிகரிக்கப்பட்டு வருவதால், திங்கள்கிழமைக்கான விலையில் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.3.45-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

    இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.74-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai