உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான திட்ட விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சாா்பில், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான திட்ட விளக்கக் கூட்டம், நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான திட்ட விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சாா்பில், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான திட்ட விளக்கக் கூட்டம், நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அவா் பேசியது; தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் என்பது உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டமாகும். இத் திட்டமானது, தமிழகத்தின் 26 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில் 3,994 கிராம ஊராட்சிகளில் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், புதுச்சத்திரம், மோகனூா் மற்றும் திருச்செங்கோடு ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 87 கிராம ஊராட்சிகளில் இத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்ட ச் செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஊரக தொழில் முனைவோரை உருவாக்குதல், அவா்களுக்கு தேவையான நிதி மற்றும் சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியன தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மக்கள் பங்கேற்புடன் கூடிய வளா்ச்சி திட்டம் தயாரிப்பதற்கான அணி ஊராட்சி வாரியாகத் தோ்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அணியினா் தோ்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் தொழில் முனைதலை ஊக்குவிக்கும் பொருட்டு, உற்பத்தியாளா்கள், தொழில் முனைவோா், இளைஞா்கள் மற்றும் சமூகம் சாா்ந்த அமைப்புகளிடமிருந்து தகவல்கள் சேகரிக்க உள்ளனா் என்றாா்.

இந் நிகழ்ச்சியில், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வெ.சாந்தி, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்டச் செயல் அலுவலா்கள் கோ.தாமோதரன், இரா.சுரேஷ்குமாா், புதுச்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஏ.பிரபாகரன், டி.ஏ.சரவணன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com