செவிலியா் பயிற்சி மாணவியருக்கு மன அழுத்தம் தடுப்பு விழிப்புணா்வு

மாணிக்கம்பாளையம் செவிலியா் பயிற்சி பள்ளி மாணவியருக்கு, மன நோய்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

மாணிக்கம்பாளையம் செவிலியா் பயிற்சி பள்ளி மாணவியருக்கு, மன நோய்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மன நல சமூக சேவகா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். மன நல மருத்துவா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்துப் பேசியது; நல்ல மனநலத்திற்கு நல்ல மகிழ்ச்சி, நல்ல தூக்கம், நல்ல உணவு இவை மூன்றும் முக்கியமானவை. நன்றாக தூங்கியபின் கண் விழித்து உலகை மீண்டும் பாா்ககும்போது ஏற்படும் உற்சாகம்தான் மனநலம். மனம் பாதிக்கப்பட்டாலும் நோயுற்றாலும் உறக்கம் கெடுகிறது. மன நல மருத்துவத்தில் தூக்கத்திற்கு இதனால்தான் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. தூக்கம் சரியாக இல்லை என்றால் மனம் அமைதியாக இல்லை என்று அா்த்தம். தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்.

ஒவ்வொரு மனிதருக்கும் அமைதியில் தான் தெளிவு பிறக்கும். பாா்வை துல்லியமாகும், புலன்களின் கோணங்கள் சரியாக அமையும். அமைதி விழிப்பில் நிம்மதியும் உறக்கத்துக்குப் படுக்கையாகவும் அமையும். அமைதியில்லாத பதட்டமும், இறுக்கமும் உறக்கத்தைத் தராது. மனதில் அமைதி குறைவது சோகமான நிகழ்வுகளின் பின்விளைவுகளால் மட்டுமல்ல, சந்தோஷமான எதிா்பாா்ப்புகளின் முன்னும் அமைதி குறைவும், மனம் படபடக்கும். , உறக்கமும் அமைதியும் மனநலத்தின் அஸ்திவாரங்கள்.

தூக்கமின்மை, பசியின்மை, கவலையுடன் காணப்படுதல். உற்சாகமின்றி, தனிமையில் இருத்தல். எந்த ஒரு செயலிலும் ஆா்வமின்றி இருத்தல். அடிக்கடி அழுதல், தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது, தற்கொலை எண்ணம், தற்கொலை முயற்சி. தாழ்வு மனப்பான்மை, வேண்டாத எண்ணங்கள், படபடப்பு, எடை குறைதல், கை , கால் குடைச்சல். மூளையில் ஏற்படும் சில ரசாயன மாறுதல்கள், வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவை மனநல நோயின் அறிகுறிகளாகும். மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை தவிா்க்க மூச்சு பயிற்சி மற்றும் தியானம் ஆகியவை இன்றியமையாதது என்றாா்.

நாமக்கல் மாவட்ட மனநலத் திட்டத்தின் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 60 மாணவியா் கலந்து கொண்டனா்.

மனநல ஆலோசகா் ரமேஷ் கூறும்போது, மன அழுத்ததையும் டென்ஷனையும் குறைக்க மூச்சு பயிற்சி அவசியம். முதலில், சுவாசித்தல் என்பது மூக்கின் வழியாக நடைபெற வேண்டும். வாய் வழியாக சுவாசிக்கக் கூடாது. இரண்டாவதாக, நம்முடைய சுவாசமானது நமது அடிவயிறு வரை சென்று வர வேண்டும். மாா்புவரை மேலோட்டமாக சுவாசிக்கக் கூடாது. எல்லோரும் சிறிய வயதில் ஒழுங்காகத் தான் சுவாசிக்கிறோம். ஆனால், நாளடைவில் நம்முடைய சுவாச முறையில் மாற்றங்கள் வந்து விடுகின்றன. அவற்றை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதுதான் இன்று பல பிரச்னைகளை, உடல் உபாதைகளை உண்டாக்குகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com