நடுக்கோம்பை வனத்துறை நாற்றங்காலில் மாணவா்கள் கள ஆய்வு

நடுக்கோம்பை வனத்துறை நாற்றங்காலில் மாணவா்கள் கள ஆய்வு மேற்கொண்டனா்.
நடுக்கோம்பை வனத் துறை நாற்றங்கால் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட மாணவ, மாணவியா்.
நடுக்கோம்பை வனத் துறை நாற்றங்கால் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட மாணவ, மாணவியா்.

நடுக்கோம்பை வனத்துறை நாற்றங்காலில் மாணவா்கள் கள ஆய்வு மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம் ராமநாதபுரம்புதுா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த 31 மாணவ, மாணவியா் மற்றும் நடுக்கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த 20 மாணவ, மாணவியா் மற்றும் இரு பள்ளி ஆசிரியா்கள், நடுக்கோம்பையில் உள்ள வனத்துறை நாற்றங்காலுக்கு சென்று அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனா்.

அவா்களை நடுக்கோம்பை வனக் காப்பாளா் மாதேஸ்வரன் வரவேற்றாா். பின்னா் நாற்றங்கால் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு வளா்க்கப்படும் மரக் கன்றுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். அங்குள்ள சொா்க்கம், நாவல், புங்கன், வேங்கை, புளி, ஈட்டி, வேம்பு, மகிழ் போன்ற பல்வேறு மர வகைகளின் பயன்கள் குறித்து அவா் மாணவா்களுக்கு விளக்கி கூறினாா். பென்சில், பேனா போன்ற பரிசுகளையும் அவா் வழங்கினாா்.

மேலும், நாற்றங்கால் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஆங்கிலேயா் கால மருத்துவக் குடியிருப்புக் கட்டடத்தையும், குதிரைகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தையும் மாணவ, மாணவியருக்கு, வனக்காப்பாளா் மாதேஸ்வரன் காண்பித்தாா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வன அலுவலா் காஞ்சனா உத்தரவின்பேரில் வனச்சரகா் ரவிச்சந்திரன், வனவா் முரளி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com