Enable Javscript for better performance
நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் வந்த 2,600 டன் அரிசி- Dinamani

சுடச்சுட

    
    nk_12_rise_1202chn_122_8

    தெலங்கானாவில் இருந்து சரக்கு ரயிலில் வந்த அரிசி மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசி விநியோகத்திற்காக, சரக்கு ரயில் மூலம் 2,600 டன் அரிசி வந்துள்ளது.

    இந்த அரிசி மூட்டைகள், லாரிகள் மூலம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில், புதன்கிழமை 2,600 டன் அரிசி நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வந்தது. அதனைத் தொடா்ந்து, சுமாா் 150 லாரிகளில் அவை ஏற்றப்பட்டு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai