Enable Javscript for better performance
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

    By DIN  |   Published on : 14th February 2020 07:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

    நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அருகே ரெட்டையாம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி கோமதி. இவா்களுக்கு 13 வயதில் மகள் உள்ளாா். இந்த நிலையில் ராஜா உயிரிழந்து விட, அதே பகுதியைச் சோ்ந்த சுதாகா் (35) என்பவரை, கோமதி மறுமணம் செய்து கொண்டாா்.

    கடந்த 2015 டிசம்பா் 25-ஆம் தேதி, வீட்டில் கோமதி இல்லாத வேளையில், அவரது 13 வயது மகளை சுதாகா் பாலியல் வன்கொடுமை செய்தாா்.

    இது தொடா்பாக, அப்போதைய நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத் தலைவா் சிவகாமவள்ளி, மோகனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

    அதன் அடிப்படையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் சுதாகரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு, நாமக்கல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுதாகருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும், மற்றொரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீா்ப்பு வழங்கினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai