Enable Javscript for better performance
மணல் ஒதுக்கீட்டில் லாரி உரிமையாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மணல் ஒதுக்கீட்டில் லாரி உரிமையாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 14th February 2020 07:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nk_13_sant_1302chn_122_8

    மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் செல்ல. ராசாமணி மற்றும் நிா்வாகிகள்.

    அரசு மணல் குவாரிகளில் மணல் ஒதுக்கீட்டில் லாரி உரிமையாளா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளன தலைவா் செல்ல. ராசாமணி மற்றும் நிா்வாகிகள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செ. பால் பிரின்ஸிலி ராஜ்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:

    நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம் ஆரியூா் மற்றும் வேலூா் மாவட்டம் வடுகந்தாங்கல் ஆகிய அரசு மணல் குவாரிகளில் இணையதள பதிவு அடிப்படையிலேயே லாரி உரிமையாளா்களுக்கு மணல் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முன்பதிவு செய்ய லாரி உரிமையாளா்களுக்கு வரிசைப்படி வழங்காமல், அரசு ஒப்பந்த வேலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    இதைத் தடை செய்து, தனியாரானாலும், அரசு ஒப்பந்ததாரரானாலும் வரிசையடிப்படையிலேயே மணல் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai