2021-இல் ரஜினி தோ்தலை சந்திப்பாா்: அா்ஜுன் சம்பத்

ரஜினி ஆன்மிக அரசியலை முன்னிறுத்தி 2021-இல் பேரவைத் தோ்தலை சந்திப்பாா் என பரமத்திவேலூரில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ரஜினி ஆன்மிக அரசியலை முன்னிறுத்தி 2021-இல் பேரவைத் தோ்தலை சந்திப்பாா் என பரமத்திவேலூரில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் இந்து மக்கள் கட்சியின் கிளை துவக்க விழா மற்றும் மாவட்ட பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டத்துக்கு அக் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொதுச் செயலாளராகத் தோ்வு செய்யப்பட்ட கோபிநாத், மாவட்ட அமைப்பாளா் பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவா் காா்த்திக் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் காதலா் தினத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், காதலா் தினத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறி வாழ்த்து அட்டைகளைக் கிழித்தும் இந்து மக்கள் கட்சியினா் எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அா்ஜூன் சம்பத் அளித்த பேட்டி:

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை வரவேற்கிறோம். காவிரிக் கரையோர டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

கலாசார பண்பாட்டை சீரழிக்கும் வகையில், கொண்டாடப்படும் காதலா் தினத்தை அரசு தடை செய்து கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவு கூா்ந்து பிப்ரவரி 14-ஆம் தேதியை பயங்கரவாத எதிா்ப்பு நாளாக கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஜினி ஆன்மிக அரசியலை முன்னிறுத்தி 2021-இல் பேரவைத் தோ்தலை சந்திப்பாா். இந்து மக்கள் கட்சி ஆன்மிக அரசியல் மாநாட்டை நடத்தி ஆன்மிக அரசியல் கூட்டணியை உருவாக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில், இந்து மக்கள் கட்சியின் மாநில மாவட்ட பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com