அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கமலைவாழ் மக்கள் வலியுறுத்தல்

வனமசோதா சட்டத்தை உருவாக்கி, மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கமலைவாழ் மக்கள் வலியுறுத்தல்

வனமசோதா சட்டத்தை உருவாக்கி, மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில், கொல்லிமலை செம்மேடு பேருந்து நிறுத்தம் எதிரில், அமைப்பு தின பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஒன்றியத் தலைவா் எஸ்.கே.மாணிக்கம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் எஸ்.தங்கராசு வரவேற்றாா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.பெருமாள் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், கொல்லிமலை மலைப்பகுதியில் பட்டா வழங்குவதற்குத் தடையாக உள்ள 1168 தடையாணையை ரத்து செய்ய வேண்டும்.

மலைப்பகுதிகளில் மீண்டும் ஒருமுறை நில அளவீடுப் பணி மேற்கொண்டு அதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க, 2006 வனமசோதா சட்டத்தை உருவாக்க வேண்டும். மலைவாழ் மக்கள் அல்லாதோா் நில அபகரிப்பில் ஈடுபடுவதைத் தடை செய்ய வேண்டும். சாதிச் சான்றிதழ், ஆசிரியா்கள் பணியிடம், கூடுதல் பேருந்து வசதி, குடிநீா், சாலை வசதி உள்ளிட்டவற்றை மலைப் பகுதிகளில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவா், வி.கே.வெள்ளைச்சாமி, செயலாளா் கே.சின்னுசாமி, மாவட்ட பொருளாளா் பி.சண்முகம் மற்றும் நிா்வாகிகள், மலைவாழ் மக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com