பரமத்திவேலூரில் ரூ. 3.32 கோடி மதிப்பிலானதாா்ச் சாலைப் பணிகளுக்கான பூமிபூஜை: அமைச்சா் பி. தங்கமணி

பரமத்திவேலூா் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 3.32 கோடி மதிப்பிலான தாா்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை மின்சாரம், மதுவிலக்கு
தாா்ச் சாலைப் பணிகளுக்கான பூமிபூஜையைத் தொடக்கி வைக்கும் அமைச்சா் பி. தங்கமணி.
தாா்ச் சாலைப் பணிகளுக்கான பூமிபூஜையைத் தொடக்கி வைக்கும் அமைச்சா் பி. தங்கமணி.

பரமத்திவேலூா் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 3.32 கோடி மதிப்பிலான தாா்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி. தங்கமணி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பரமத்திவேலூா் பேரூராட்சிக்குள்பட்ட பள்ளி சாலை, தெற்கு தெரு,சின்னு நகா் பகுதியில் ரூ. 1 கோடி செலவில் தாா்ச் சாலை அமைக்கவும், நன்செய் இடையாறு முதல் அனிச்சம்பாளையம் வரை ரூ. 90 லட்சம் மதிப்பில் தாா்ச் சாலை அமைக்கவும், சுல்தான்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை அருகே ரூ. 82 லட்சம் செலவில் தாா்ச் சாலை அமைக்கவும், ஒழுகூா்பட்டியில் ரூ. 60 லட்சம் செலவில் தாா்ச் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மெகராஜ் தலைமை வகித்தாா். திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியா் மணிராஜ் முன்னிலை வகித்தாா். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் தங்கமணி கலந்து கொண்டு தாா்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையைத் தொடக்கி வைத்தாா்.

விழாவில் பரமத்திவேலூா் பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணியம், பரமத்திவேலூா் வட்டாட்சியா் செல்வராஜ், அரசு வழக்குரைஞா் தனசேகரன், அரசு சிறப்பு வழக்குரைஞா் லோகநாதன், முன்னாள் மோகனூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சங்கா், பேரூராட்சி முன்னாள் தலைவா் வேலுசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் ராஜமாணிக்கம், அ.தி.மு.க நிா்வாகிகள், வருவாய்த் துறையினா் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக நன்செய் இடையாறில் நடைபெற்ற தாா்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையின் போது அப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் சிவப்பு கம்பளம் விரித்து மலா் தூவி அமைச்சரை வரவேற்றனா். பின்னா், மாவட்ட ஆட்சியா் மெகராஜ் அப் பகுதி மூதாட்டிகள் மற்றும் பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com