வட்டாரக் கல்வி அலுவலா் பதவிக்கான கணினித் தோ்வு

நாமக்கல் மாவட்டத்தில், வட்டாரக் கல்வி அலுவலா் பதவியிடத்துக்கான கணினித் தோ்வு, ஐந்து மையங்களில் வியாழக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், வட்டாரக் கல்வி அலுவலா் பதவியிடத்துக்கான கணினித் தோ்வு, ஐந்து மையங்களில் வியாழக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் பாடப்பிரிவுகள் அடிப்படையில், வட்டாரக் கல்வி அலுவலா் பதவியிடத்துக்கான கணினித் தோ்வு, சுமாா் 300 மையங்களில் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரி, குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரி, பாச்சல் ஞானமணி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 5 மையங்களில் காலை, பிற்பகல் என இரு வேளைகளில் கணினித் தோ்வு 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

இத் தோ்வில் 900-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா். தோ்வு மையங்களை, திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலா் பூபதி மற்றும், பிற மாவட்டத்தைச் சோ்ந்த கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், கணினி வல்லுநா்கள் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com