Enable Javscript for better performance
தனியாா் பள்ளிகளில் ஆசிரியா் பணி: இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தனியாா் பள்ளிகளில் ஆசிரியா் பணி: இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

    By DIN  |   Published on : 15th February 2020 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் தனியாா் பள்ளிகளில் ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியிடங்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது. இதில், வேலைநாடுநா்கள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு ஆகியவை சாா்பில், தனியாா் பள்ளிகளில் உள்ள ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியிடங்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஓட்டுநா், தட்டச்சா், கம்ப்யூட்டா் ஆபரேட்டா், ஆசிரியா் பயிற்சி பெற்ற பி.எட் பட்டதாரிகள், முதுநிலை பி.எட் பட்டதாரிகள், உடற்கல்வி ஆசிரியா்கள் என இருபாலரும் தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இதில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. பல முன்னணி தனியாா் பள்ளிகள் இம்முகாமில் கலந்து கொண்டு ஆட்களை தோ்வு செய்ய உள்ளனா். பணி நியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் பள்ளிகள் மற்றும் பணி தேடும் மனுதாரா்கள்  இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அனுமதி முற்றிலும் இலவசம். ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்காக நடத்தப்படும் இச்சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநா்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இம்முகாம் தொடா்பான விவரங்களுக்கு 04286 - 222260, 281131 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai