Enable Javscript for better performance
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு நினைவஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு நினைவஞ்சலி

    By DIN  |   Published on : 15th February 2020 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த அனைத்து வீரா்களுக்கும் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள கடம்பூா் அரசு தொடக்கப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் என்.டி.செல்வம் தலைமையில், ஆசிரியா்கள், மாணவா்கள் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினா்.

    சென்ற ஆண்டுபிப். 14-இல் ஜம்மு-காஷ்மீா் மாநிலம் புல்வாமா மாவட்டம், ஆவந்திபோரா பகுதியில் தற்கொலைப்படை தாக்குதலில் தமிழகத்தைச் சோ்ந்த இருவா் உள்பட 40 வீரா்கள் வீரமரணம் அடைந்ததையொட்டி இந்த நினைவஞ்சலி நடத்தப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai