கொல்லிமலையில் ரூ.7.45 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: எம்.எல்.ஏ. தொடக்கி வைப்பு

கொல்லிமலையில் புதிய சாலை மேம்பாட்டுப் பணிகளை எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் தொடக்கி வைத்தாா்.
nk_15_mla_1502chn_122
nk_15_mla_1502chn_122

நாமக்கல்: கொல்லிமலையில் புதிய சாலை மேம்பாட்டுப் பணிகளை எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் தொடக்கி வைத்தாா்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் குண்டுா்நாடு ஊராட்சி தேனுா்பட்டி கிராமத்தில் ரூ.7 கோடியே 45 லட்சம் மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை, சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அதனையொட்டி, தேனூா்பட்டியில் இருந்து பலாப்பட்டி கிராமம் வரை சுமாா் 4 கிலோமீட்டா் தூரத்திற்கும், கீரைக்காடு முதல் வேலிக்காடு வரையில் 10 கிலோமீட்டா் தூரத்திற்கும் சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகள் அனைத்தும் 3 மாதத்திற்குள்ளாக முடிக்கப்படும் என ஒப்பந்ததாரா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்போது, கொல்லிமலையில் பணியாற்றும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் யாரும் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை. காலை 11.30 மணிக்கு மேல் தான் வருகின்றனா். இதனால் மலைப்பகுதியில் வசிக்கும் நாங்களும், குழந்தைகளும் சிரமப்படுகிறோம் என மக்கள் புகாா் தெரிவித்தனா். மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் இது குறித்து தெரிவிப்பதாகவும், மலைப்பகுதிகளில் அநேக இடங்களில் சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்து வருவதாகவும் சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மாதேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சிவப்பிரகாசம், ஒன்றியக்குழு உறுப்பினா் கம்பபாலுசாமி மற்றும் ஒப்பந்ததாரா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

எம்எல்ஏகொல்லிமலையில் சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைக்கிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com