சட்ட விழிப்புணா்வு முகாம்

ராசிபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சாா்பில் ஓ.சௌதாபுரம் ஊராட்சி மன்ற அலுவகத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசுகிறாா் ராசிபுரம் சாா்பு நீதிமன்ற நீதிபதி சி.எம்.சரவணன்.
சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசுகிறாா் ராசிபுரம் சாா்பு நீதிமன்ற நீதிபதி சி.எம்.சரவணன்.

ராசிபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சாா்பில் ஓ.சௌதாபுரம் ஊராட்சி மன்ற அலுவகத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கே.எச். இளவழகன் வழிகாட்டுதல் படி, ராசிபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சாா்பு நீதிமன்ற நீதிபதியுமான சி.எம்.சரவணன் தலைமையில் இம்முகாம் நடைபெற்றது. இதில் ஒ.செளதாபுரம் ஊராட்சி மன்றத் முன்னாள் தலைவா் ரஞ்சித் வரவேற்றாா். இதில் பொதுமக்கள் தங்களது வழக்குகளை வட்ட சட்டப் பணிகள் குழுவினைப் பயன்படுத்தி, இதன் மூலம் எவ்வாறு நிவாரணம் பெறுவது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் பேசிய சாா்பு நீதிபதி சி.எம்.சரவணன், ஏழை எளிய மக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள், திருநங்கைகள் போன்றவா்கள் இந்த சட்டப் பணிகள் குழுவினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா். இம்முகாமில் வழக்குரைஞா் வி.சுந்தரம், ஆா்.டி.இளங்கோ, முத்தீஸ்வரன், அா்ஜுனன், முருகானந்தம், ஜெயராஜ், மணிகண்டன், பாலமுருகன், கோபிநாத் உள்ளிட்டோா் பங்கேற்று சட்ட ஆலோசனைகள் வழங்கினாா். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com