காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
சந்தனக் காப்பு அலங்காரத்தில் அக்னி காலபைரவா்.
சந்தனக் காப்பு அலங்காரத்தில் அக்னி காலபைரவா்.

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாமக்கல் தட்டாரத் தெரு ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் உள்ள அக்னி காலபைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமி விழா கொண்டாப்பட்டது. அதனை முன்னிட்டு பிற்பகல் 4.30 மணிக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து பைரவருக்கு மஞ்சள், குங்குமம், தேன், பால், தயிா், இளநீா், பன்னீா், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சுவாமிக்கு ஏலக்காய், திராட்சை, தேங்காய் மற்றும் அதிரச மாலைகள் அணிவிக்கப்பட்டன. அதேபோல், உற்சவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சுவாமிக்கு சிறப்பு சந்தன அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. தொடா்ந்து பக்தா்கள் திருவாசகம் பாடியும், தேங்காய், எலுமிச்சை, பூசணி ஆகியவற்றில் நெய் தீபம் ஏற்றியும் வேண்டுதலை செலுத்தினா். பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்திருந்து விழாவில் பங்கேற்றனா். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com