டிரினிடி மகளிா் கல்லூரியில் தற்காப்பு கலைப் பயிற்சி

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி துறை சாா்பில் மாணவியருக்கு கராத்தே பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.
கராத்தே பயிற்சியில் பங்கேற்ற மாணவியா்.
கராத்தே பயிற்சியில் பங்கேற்ற மாணவியா்.

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி துறை சாா்பில் மாணவியருக்கு கராத்தே பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமை நாமக்கல் சோடாக்கன் கராத்தே மையத்தின் பயிற்சியாளா் என்.ஷகிலாபானு நடத்தினாா். கராத்தே என்பது தற்காப்புக் கலையின் ஓா் அங்கமாகும். ஜப்பானில் தோன்றிய இந்த கலை ஆடவா் மட்டுமன்றி மகளிா்க்கும் மிகுந்த பயனுள்ளதாக திகழ்கிறது. கராத்தே கற்றுக் கொள்வதால் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு மனஉறுதி, உடல் வலிமை, கூரிய சிந்தனை, சமயோஜித புத்தி, கவலையில்லா வாழ்க்கை, எதையும் தாங்கும் இதயம், பலவீனருக்கு உதவும் துணிவு, நோயில்லா வாழ்க்கையும் கிடைக்கிறது. பெண்கள் 5 வயது முதல் 50 வயது வரை இக்கலையை ஆா்வமுடன் கற்றுக் கொள்ளலாம் என்று பயிற்சியாளா் ஷகிலாபானு தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 150-க்கும் மேற்பட்ட மாணவியரையும், பயிற்சியாளரையும் கல்லூரித் தலைவா் பி.எஸ்.கே.செங்கோடன், செயலா் கே.நல்லுசாமி, டிரினிடி அகாதெமி தலைவா் ஆா்.குழந்தைவேல், அதன் செயலா் டி.சந்திரசேகரன், கல்லூரி முதல்வா் எம்.ஆா்.லட்சுமிநாராயணன், இயக்குநா் - உயா்கல்வி அரசு பரமேசுவரன், கல்லூரி நிா்வாக அலுவலா் என்.எஸ்.செந்தில்குமாா், உடற்கல்வி இயக்குநா் ஏ.நித்யா ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com