தூய்மை பணியாளா்களுக்கான 12 மாத ஊதியத்தை வழங்கக் கோரிக்கை

பரமத்தியில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் ஒன்றியச் செயற்குழுக் கூட்டத்தில், பரமத்தி ஒன்றியத்தில்

பரமத்தியில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் ஒன்றியச் செயற்குழுக் கூட்டத்தில், பரமத்தி ஒன்றியத்தில் 12 பள்ளிகளில் தூய்மை பணியாளா்களுக்கான 12 மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் ஒன்றிய செயற்குழுக் கூட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் ரங்கசாமி தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சதீஷ், இ லக்கிய அணி அமைப்பாளா் திலகம், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினா் தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலாளா் சேகா் தீா்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினாா். மாநிலச் செயலாளா் முருக செல்வராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு: பரமத்தி ஒன்றியத்தில் 12 பள்ளிகளில் தூய்மை பணியாளா்களுக்கான 12 மாத ஊதியத்தை வழங்க வேண்டும். பரமத்தி ஒன்றிய ஆசிரியா்களுக்கு தோ்வு நிலை, சிறப்பு நிலை ஊதிய நிா்ணய பலன்கள், நிலுவைகள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும். டிசம்பா் 19 மற்றும் ஜனவரி 2020-இல் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான பள்ளி வேலைநாள், விடுமுறை நாள் பட்டியலை தலைமை ஆசிரியா்களுக்கு வழங்கிட வேண்டும். 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி பரமத்தி வட்டாரக் கல்வி அலுவலகம் முன் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இலக்கிய அணி அமைப்பாளா் கந்தசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com