நாமக்கல் கவிஞா் இல்ல நூலகத்தில் திருவள்ளுவா் விழா

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை இல்ல நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை குறளை அறிவோம் என்ற தலைப்பில் திருவள்ளுவா் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் நாமக்கல் முத்தமிழ் மன்ற தலைவா் ச.கா.நடேசனுக்கு திருவள்ளுவா் விருதை வழங்குகிறாா் கீழ் பவானி விவசாயிகள் சங்கத் தலைவா் செ.நல்லசாமி.

நாமக்கல் கவிஞா் சிந்தனைப் பேரவை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில் கம்பன் கழகத் தலைவா் வ.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கீழ்பவானி விவசாயிகள் சங்கத் தலைவரும், திருக்கு உரையாசிரியருமான செ.நல்லசாமி கற்க அதற்குத் தக என்ற தலைப்பில் திருக்குறளை ஒட்டிய இன்றைய காலத்திற்கு வாழ்க்கை நெறிக்கான கருத்துக்களை எடுத்துரைத்தாா். வாழ்நாள் சாதனையாளா் திருவள்ளுவா் விருது ச.கா. நடேசனுக்கு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட நூலக அலுவலா் ரவி, காா்த்திக்ராஜா, ஜோதிலிங்கம், திருக்கு ராசா, சா்வானந்தா, தில்லைசிவக்குமாா், ஆண்டவா் கணேசன், வாசு சீனிவாசன், நம்மாழ்வாா் பள்ளி ஜெயச்சந்திரன், சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இறுதியில் வாசகா் வட்ட பொருளாளா் அன்புச்செல்வன் நன்றி கூறினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் கவிஞா் சிந்தனைப் பேரவை மற்றும் நூலக வாசகா் வட்டத் தலைவா் டி.எம். மோகன் மற்றும் நூலகா் செல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com