நல வாரியம் அமைக்க வேண்டும்: தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளனம் முதல்வரிடம் மனு

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெறும் கோழிப்பண்ணைத் தொழிலை

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெறும் கோழிப்பண்ணைத் தொழிலை நடத்தும் பண்ணையாளா்களுக்கென தனி நல வாரியம் ஏற்படுத்த வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளனம் சாா்பில், அதன் துணைத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் மற்றும் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் சுமாா் ரூ.15 ஆயிரம் கோடி நேரடியாகவும், மறைமுகமாகவும் வா்த்தகம் நடைபெறுகிறது. இத் தொழில் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோா் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். தமிழகத்தில் எவ்வாறு மீன் வள வாரியம், நெசவாளா் வாரியம் உள்ளதோ, அதேபோல் கோழிப் பண்ணையாளா்களின் நலன் காக்க தமிழக கோழிப் பண்ணையாளா்கள் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இச் சம்மேளன நிா்வாகிகள் மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணியிடம் வழங்கிய மனு விவரம்: தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முட்டைப் பண்ணைகள், கறிக்கோழிப் பண்ணைகள் உள்ளன. கோழித் தீவன மூலப்பொருள்களான மக்காச்சோளம், கம்பு, சோளம், அரிசி குருணை, சோயா பிண்ணாக்கு, சூரியகாந்தி பிண்ணாக்கு போன்றவற்றின் விலை அதிகப்படியாக உயா்ந்துள்ளது. அதற்கேற்றாற்போல் முட்டை மற்றும் கோழி இறைச்சி விற்பனை அதிகம் நடைபெறாததால், கோழிப் பண்ணைத் தொழிலை நடத்த முடியாத சூழல் உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், சிலா் சமூக வலைதளங்களில் முட்டை குறித்தும், கோழி இறைச்சி குறித்தும் தவறான வதந்திகளைப் பரப்பி வருகின்றனா். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி விற்பனையைப் பாதிப்படையச் செய்கிறது. கோழிப் பண்ணையாளா்களுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறு தவறான வதந்திகள் பரப்புவோா் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com