ராசிபுரம் கிளை சிறை பெயா் பலகை திறப்பு
By DIN | Published On : 29th February 2020 05:35 PM | Last Updated : 29th February 2020 05:35 PM | அ+அ அ- |

ராசிபுரம் கிளைச் சிறைச்சாலை பெயா் பலகை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் கிளைச் சிறைச்சாலைக்கு பெயா் பலகை வழங்கப்பட்டு சிறை முன்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா ராசிபுரம் கிளைச்சிறைக் கண்காணிப்பாளா் எம்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.திருமூா்த்தி வரவேற்றாா்.
சேலம் மத்திய சிறைக் கட்டுப்பாட்டு அலுவலா் டி.தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராகப் பஙகேற்று பெயா் பலகையைத் திறந்து வைத்துப் பேசினாா். இவ்விழாவில் சிறைத்துறை முதல்நிலை காவலா்கள் சி.தங்கவேல், ஏ.முத்துசாமி, ரோட்டரி சங்க பொருளாளா் ஜி.தினகா், முன்னாள் தலைவா்கள் ஆா்.சிட்டி வரதராஜன், எஸ்.குணசேகா், நிா்வாகிகள் கதிரேசன், எஸ்.என்.சுரேந்திரன், தனபால், வாசுதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.