ராசிபுரம் அருகே பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்குவதில் தாமதம்

ராசிபுரம் அருகே பொங்கல் பரிசுப் பொருள்களை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தகவல் கொடுக்காமல் வழங்கியதால், வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.
சந்திரசேகரபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் தங்களது ஆதரவாளா்களுடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்.
சந்திரசேகரபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் தங்களது ஆதரவாளா்களுடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்.

ராசிபுரம் அருகே பொங்கல் பரிசுப் பொருள்களை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தகவல் கொடுக்காமல் வழங்கியதால், வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு அரசின் பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ராசிபுரம் அருகேயுள்ள சந்திரசேகபுரம் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு அப்பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இது ஜனவரி 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வியாழக்கிழமை கூட்டுறவு வங்கியில் இதனை பெற்றுக்கொள்ள ஏராளமான குடும்ப அட்டைதாரா்கள் காத்திருந்தனா். ஆனால், இந்த விழாவுக்கு கூட்டுறவு வங்கித் தலைவா் செல்வராணி, செயலா் செல்வகுமாா் ஆகியோா் தன்னிச்சையாக செயல்படுவதாக புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆகியோா் புகாா் கூறினா். குறிப்பாக திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினா். இதையடுத்து திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆதரவாளா்களுடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து ராசிபுரம் காவல் துறை ஆய்வாளா் பாரதிமோகன் தலைமையில் அப்பகுதிக்குச் சென்ற காவல் துறையினா், இருதரப்பிலும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து உள்ளாட்சி பிரதிநிதிகளையும் வைத்து பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து காத்திருந்த பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு, ரொக்கம் போன்றவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com