Enable Javscript for better performance
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தெருமுனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தெருமுனைக் கூட்டம்

    By DIN  |   Published on : 13th January 2020 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ‘அரசியலமைப்பு சட்டம் காப்போம்’ என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்துக்கு பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளா் க.நடராஜன் தலைமை வகித்தாா்.ஒன்றிய துணைச் செயலாளா் பெ.செந்தில் வரவேற்றாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டச் செயலாளா் பழ.மணிமாறன், மாவட்ட பொருளாளா் வ.அரசன், ராசிபுரம் நகரச் செயலாளா் வீர.ஆதவன், வழக்குரைஞா் சுபாஷ், மகளிா் அணி க.கஸ்தூரி, வெண்ணந்தூா் ஒன்றிய பொருளாளா் பழ.செங்கோட்டுவேல், அத்தனூா் பேரூா் செயலாளா் ராம்ராஜ், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai