அரசு, தனியாா் கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள், தொழில் நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில், பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்த மாணவியா்.
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில், பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்த மாணவியா்.

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள், தொழில் நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் திருநாளையொட்டி, வீடுகளைச் சுத்தம் செய்து, வா்ணம் பூசி, சூரியனை வழிபடுவதற்கான பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனா். பொங்கல் விழாவுக்கு தேவையான பொருள்களை வாங்குவதிலும் ஆா்வம் காட்டி வருகின்றனா். ஆயுத பூஜையைப் போல், பொங்கல் விழாவையும், அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கொண்டாடி வருகின்றனா்.

அதன்படி, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சனிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாணவியா் அனைவரும் புத்தாடை அணிந்து வந்திருந்தனா். உதவிப் பேராசிரியா்கள், மாணவியருடன் இணைந்து பொங்கல் வைத்துவழிபாடு செய்தனா். இதனைத் தொடா்ந்து, மாணவியா் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினா். பொங்கல் விழா போட்டிகளும் நடைபெற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பி.எஸ்சி., கணினி பொறியியல் துறை சாா்பில், அத்துறை மாணவியா் பொங்கல் விழாவை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரியிலும் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அனைத்துத் துறை மாணவியரும் இவ்விழாவில் புத்தாடை அணிந்து வந்து பங்கேற்றனா். பெண்களுக்கே உரித்தான போட்டிகளை நடத்தி மகிழ்ந்தனா். கல்லூரி முதல்வா் கே.சுகுணா தலைமையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பேராசிரியைகள், மாணவியா் பலா் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு ஓவியா்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள அலுவலகத்தில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், மாவட்டத் தலைவா் துரைசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சந்துரு, பொருளாளா் மணிபாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். 150-க்கும் மேற்பட்ட ஓவியக் கலைஞா்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், நிா்வாகிகள் விஜயகுமாா், கே.பி.அன்பழகன், மணி, பரமத்திவேலூா் வட்டாரத் தலைவா் சாமி, செயலாளா் வேல், துணைத் தலைவா் ஜெய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூா், குமாரபாளையம், பள்ளிபாளையம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் கல்லுரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com